search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மன் விரதம்"

    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு உள்ளவர்கள் வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.
    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு, மன உளைச்சல் வழக்கு என்று வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் நேர்மைவாதிகள், வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.

    சக்தியின் அம்சமாக விளங்கும் இவள், ஆணவத்தை அடக்கி பக்தர்களைக் காப்பதிலும் அருள்புரிகிறாள். கலைத்துறையில் ஈடுபட விரும்புபவர்கள், கலைத்துறையில் வெற்றிபெறவும். வளர்ச்சியோடு நீடித்த புகழை பெறவும் இந்த திதி நித்யா தேவி விஜயா அருள்புரிகிறாள்.
     
    நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் விரதம் இருந்து சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    நீங்கள் வளர்பிறை துவாதசி அல்லது தேய் பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி விஜயா. அன்றைய தினம் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி, விஜயாவை வணங்கினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கலைத்துறையில் வளர்ச்சி ஏற்படும்.

    மூலமந்திரம்:

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.
    காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
    மாசி மாதமும், பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. கணவனின் ஆரோக்கியம் மற்றும் ஆயுள் விருத்தியை கொடுக்கும் காரடையான் நோன்பு இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

    பூஜை செய்யும் காலம்:

    காரடையான் நோன்பு தினம்: பங்குனி 1ம் தேதி (15-03-19)
    நைவேத்தியம்:- காரடையான் நோன்பு அடை ( இனிப்பு, உப்பு)

    காரடையான் நோன்பு பொதுவாக கெளரி நோன்பு, சாவித்திரி விரதம், காமாட்சி நோன்பு என கூறுவர். சாவித்திரி நோன்பு என அழைக்கப்படும் இந்த விரதம் இருந்தால் கணவனின் ஆயுளை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.



    கற்பில் சிறந்தவளான சாவித்திரி, ஆயுள் காலம் முடிந்து அவரின் கணவன் சத்யவானின் உயிரை எமதர்ம ராஜன் பரித்துச் சென்ற போது, எமனிடமிருந்து மீட்டு வந்தாள் என நம்பப்படுகிறது.

    விரதம் இருக்கும் முறை:

    இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பழங்களை சாப்பிடலாம். அதிகாலை நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அலங்கரித்து, வாசலை மா இலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் காமாட்சி அம்மனின் படங்கள் அல்லது விக்ரகத்தை பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.

    விரதம் அன்று செய்த அடையை சிறிது மீதம் வைத்து மறுநாள் பசுவுக்கு கொடுத்து, பசுவை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். அதனால் தான் விரதத்தின் போது பால், தயிர் பொருட்களை சாப்பிடக்கூடாது.

    இந்த விரதம் இருந்தால் விரதம் இருக்கும் பெண்ணின் கணவன் ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் பெருவான் என்பது ஐதீகம். 
    இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்ய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம். இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான்- சாவித்ரி கதை சொல்லப்படுகிறது.

    இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய் வைத்து பட்டுத்துணி சுற்றி பூமாலை சாற்ற வேண்டும். மஞ்சள் சரடு (கயிறு) எடுத்து பசு மஞ்சள், பூ இணைத்து அதன்மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருள்புரியுமாறு அம்மனை வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள்.

    பின்னர் பெண்கள் மஞ்சள் சரடு அணிந்து கொள்வார்கள். கட்டுக் கிழத்தி என்று சொல்லப்படும் வயதான தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் பெண்களை வணங்கி அவர்களது ஆசிர்வாதம் பெற்று, அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பாகும். சிவனுக்காக உப்பு அடை, பார்வதிக்காக வெல்ல அடை நைவேத்யம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன், மறுக்காமல் எனக்கு மாங்கல்ய பாக்கியம் தா’ என்று பிரார்த்தனை செய்து கணவன் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

    நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் இந்த நோன்பை கடைபிடித்தால் கணவன் - மனைவி இடையே இருக்கும் பூசல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி பாசமும், நேசமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பெண்களின் ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கிய தடை நீங்கி வம்சம் விருத்தியாகும். இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    ஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்தால் எண்ணிய வேண்தல்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஆடி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் வெகு சிறப்பான பலனைப் பெறலாம். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு, தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.

    அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும்.

    ஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும், ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே ‘நவசக்தி பூஜை’ எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

    வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.
    பார்வதிதேவியின் பல்வேறு வடிவங்களில் ஒன்று ராஜராஜேஸ்வரி அம்மன். வறுமைகளை நீக்கி அனைத்து ஐஸ்வரியங்களையும் அளிப்பதில் இந்த அம்மனுக்கு நிகர் இவரே. இந்த அன்னையை வழிபடுவதற்கு தனியாக விரத முறைகள் இருக்கின்றன.

    ராஜராஜேஸ்வரி அன்னையை ஒரு நல்ல நாளில் தொடங்கி, தொடர்ச்சியாக 48 நாட்கள் விரதம் இருந்து தியானிக்க வேண்டும். இந்த விரத நாட்கள் முழுவதும் பிரம்ம முகூர்த்தம் முடிவதற்கு முன்பாக, அதாவது காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து நீராடி அம்மனை வணங்க வேண்டும். ராஜராஜேஸ்வரி அம்மனின் படத்தை பூஜை அறையில் வைத்து, மாலைகள் சூட்டி, தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபடலாம்.

    இந்த விரத நாட்களில் மாமிசம், மது போன்றவற்றை நீக்கி விடவேண்டும். எந்த வீட்டில் விரதம் இருக்கத் தொடங்குகிறோமோ, அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். வேறு வீடுகளிலோ, வெளியிலோ சென்று விரதத்தை நிறைவு செய்யக் கூடாது. இரவில் எங்கேயாவது தங்கிவிட்டு வந்தால், விரதம் தடைபட்டுவிடும். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும்.

    இவ்வாறு செய்து வந்தால், பில்லி, சூனியம் உள்ளிட்ட மந்திர தந்திரங்கள் எதுவும் நம்மை அண்டாது. விரோதிகளும், துரோகிகளும் விலகுவார்கள். அனைவரும் போற்றக்கூடிய வசிய சக்தி கிடைக்கும். சித்து வேலைகள் கைகூடும். அதிர்ஷ்டத்தையும், ஐஸ்வரியத்தையும் தரும் லட்சுமி தேவி வீட்டின் வாசல் கதவைத் தட்டுவாள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். அரசனும் பணியும் தகுதி வந்து சேரும்.
    ×